search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவி கடத்தல்"

    • போக்சோவில் கைது
    • வேலூர் ஜெயிலில் அடைப்பு

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் டவுன் ரெட்டி தோப்பை சேர்ந்தவர் பாட்ஷா (வயது 23). மீன் வியாபாரி. இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயதுடைய கல்லூரி மாணவியை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.

    இது குறித்து ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து வாலிபரை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு கரூரில் பதுங்கி இருந்த பாட்ஷாவை கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.

    • மாணவியின் தாயார் ரேவதி பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
    • மாணவி தான் கடத்தப்படுகிறோம் என்று அறியாமல் ராமசாமியுடன் சென்று இருக்கிறார்.

    பீளமேடு:

    கோவை பீளமேடு கிரி அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் சேகர். சூலூர் அரசூரில் உள்ள கிரைண்டர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ரேவதி (43). கட்டிட வேலைக்கு சென்று வந்தார். இவர்களது மகள் பயோனியர் மில் ரோட்டில் உள்ள மாநகராட்சி பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    கடந்த 11-ந் தேதி சேகர் பணியாற்றும் நிறுவனத்தின் உரிமையாளரின் செல்போனுக்கு மர்ம நபர் ஒருவர் பேசினார். உங்கள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் சேகரின் மகளை நான் கடத்தி வைத்துள்ளேன். ரூ.5 லட்சம் பணம் கொடுத்தால் குழந்தையை விட்டு விடுகிறேன் என தெரிவித்தார். மேலும் அந்த மாணவியிடமும் செல்போனை கொடுத்து மர்ம நபர் பேச செய்தார்.

    இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த உரிமையாளர், சேகரை அழைத்து விவரத்தை தெரிவித்தார். சேகர் வீட்டுக்கு தொடர்பு கொண்டு மகளை பற்றி விசாரித்தார். மாணவி பள்ளி முடிந்து வீட்டு வராதது தெரியவந்தது. இதனால் மாணவி கடத்தப்பட்ட விவரம் உறுதியானது.

    இதுபற்றி மாணவியின் தாயார் ரேவதி பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் மர்ம நபர் மிரட்டல் விடுத்த செல்போன் எண்ணை கொண்டு விசாரித்தனர்.

    அப்போது மாணவியை கடத்திய நபர் பஸ்சில் சூலூர் பாப்பம்பட்டியை கடந்து பஸ்சில் செல்வது தெரியவந்தது. இறுதியில் திண்டுக்கல்லில் அவர் மாணவியுடன் இறங்கிய விவரமும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் திண்டுக்கல்லுக்கு விரைந்து சென்று கடத்தப்பட்ட மாணவியை மீட்டனர். மேலும் அவரை கடத்திய நபரையும் கைது செய்தனர்.

    விசாரணையில் அந்த நபர் வெள்ளலூர் முல்லை நகரைச் சேர்ந்த ராமசாமி (வயது 52) என்பது தெரியவந்தது. இவர் கட்டிட மேஸ்திரியாக பணியாற்றி வருகிறார். இவரிடம் தான் மாணவியின் தாயார் ரேவதி கட்டிட வேலைக்கு சென்று வந்துள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் பழி வாங்கும் எண்ணத்துடன் ராமசாமி, ரேவதியின் மகளை கடத்தி இருக்கிறார்.

    பள்ளி முடிந்து திரும்பிய மாணவியை ராமசாமி சந்தித்துள்ளார். ஏற்கனவே அறிமுகம் ஆன நபர் என்பதால் மாணவியும் அவரிடம் பேசி உள்ளார். உனது தாயாருக்கு உடல் நலம் சரியில்லை, ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளோம், நீ என்னுடன் வா, அழைத்துச் செல்கிறேன் என்று கூறியே மாணவியை அழைத்துச் சென்று இருக்கிறார். ஆனால் மாணவி தான் கடத்தப்படுகிறோம் என்று அறியாமல் ராமசாமியுடன் சென்று இருக்கிறார்.

    இருந்தாலும் போலீசார் அதிரடி விசாரணை மேற்கொண்டு ராமசாமியை பிடித்து விட்டனர். அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். மாணவி மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

    • மூத்த மகள் விக்னேஷ்வரிக்கு கடந்த மாதம் புதுவையில் திருமணம் நடந்தது.
    • காவ்யாவின் தாய் லலிதா ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் அளித்தார்.

    புதுச்சேரி:

    புதுவை ரெட்டியார் பாளையம் தேவாநகரை சேர்ந்தவர் அமிர்தமுருகன் புஷ்கரன். இவரது மனைவி லலிதா (வயது 50).

    பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்களான இவர்களுக்கு விக்னேஷ்வரி (29), காவ்யா (22) என்ற 2 மகள்கள் உள்ளனர். காவ்யா பிரான்சில் 3-ம் ஆண்டு மருத்துவ படிப்பு படித்து வருகிறார்.

    இதில் மூத்த மகள் விக்னேஷ்வரிக்கு கடந்த மாதம் புதுவையில் திருமணம் நடந்தது. இந்த திருமண நிகழ்ச்சிக்காக காவ்யா புதுவைக்கு வந்திருந்தார். தொடர்ந்து பெற்றோருடன் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் காவ்யா கடைக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றார். ஆனால் அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை.

    இதுகுறித்து காவ்யாவின் தாய் லலிதா ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் அளித்தார். புகாரில் காவ்யாவை அரும்பார்த்தபுரம் தக்ககுட்டையை சேர்ந்த அஜித் என்ற வாலிபர் கடத்தி சென்றிருக்கலாம் என்று சந்தேகப்படுவதாக தெரிவித்துள்ளார்.

    பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பிரான்ஸ் மருத்துவ கல்லூரி மாணவி கடத்தப்பட்ட சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கல்லூரி மாணவி வழிமறித்து வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    ராஜபாளையம் திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் புலியூர் சித்தன். இவரது 17 வயது மகள் கிருஷ்ணன் கோவிலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத் தன்று அவரை மர்ம நபர் ஒருவர் செல்போனில் அழைத்தார். அவரது தந்தைக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், உடனடியாக ஊருக்கு வருமாறும் அவர் கூறியுள்ளார்.

    அதனை நம்பிய மாணவி உடனடியாக ஊருக்கு புறப்பட்டார். கல்லூரிக்கு வெளியே வந்து பஸ் ஏறுவதற்காக காட்டன் மார்க்கெட் பகுதிக்கு வந்தார். அப்போது மர்ம நபர்கள் அவரை வழிமறித்து வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து கிருஷ்ணன் கோவில் போலீஸ் நிலை யத்தில் சித்தன் புகார் செய்தார். அதில், ராஜ பாளையம் தாட்கோ காலனியை சேர்ந்த முத்துப் பாண்டி மகளை கடத்தி யிருக்கலாம் என சந்தே கிப்பதாக அவர் கூறியுள் ளார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாணவி நேற்று கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டைவிட்டு சென்றார். ஆனால், மாலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்ப வில்லை.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவி கவுசல்யாவை தேடி வருகின்றனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் ஏரியூரை அடுத்த ஒட்டனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 19 வயது மாணவி. இவர் தனியார் கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    இந்த நிலையில் மாணவி நேற்று கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டைவிட்டு சென்றார். ஆனால், மாலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்ப வில்லை. இதனால் பதறிப்போன மாணவியின் தாய் அவரை உறவினர்கள் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடிபார்த்தார். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து மாணவியின் உறவினர் ஏரியூர் போலீஸ் நிலையத்தில் மாணவியை அதே பகுதியைச் சேர்ந்த அய்யண்ணன் மகன் சக்திவேல் (28) என்பவர் கடத்தி சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவி கவுசல்யாவை தேடி வருகின்றனர்.

    • சிறுமியை ஈத்தாமொழி அருகே சுண்டபற்றி விளையை சேர்ந்த தேங்காய் வெட்டும் தொழிலாளி கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.
    • போலீசார் செல்வகுமார் மீது கடத்தல் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வருகின்றனர்.

    குளச்சல்:

    நெல்லை மாவட்டம் ராதாபும் பண்டாரக்குளம் பகுதியை சேர்ந்தவர் சுடலை.

    இவரும், இவரது மனைவி முத்துபேச்சியும் கடந்த ஒரு வருடமாக குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே பெரியவிளை கடற்கரை பகுதியில் கூடாரம் அமைத்து வசித்து வருகின்றனர். இவர்களது 14 வயது சிறுமி ராதாபுரத்தில் அரசு நடுநிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    பள்ளி விடுமுறையை முன்னிட்டு சிறுமி பெரியவிளை வந்து பெற்றோருடன் தங்கினாள். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பெற்றோருடன் படுத்து தூங்கிய சிறுமியை காணவில்லை.

    சிறுமியை ஈத்தாமொழி அருகே சுண்டபற்றி விளையை சேர்ந்த தேங்காய் வெட்டும் தொழிலாளி செல்வகுமார் (35) என்பவர் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.

    இது குறித்து தாயார் முத்துபேச்சி குளச்சல் மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் செல்வகுமார் மீது கடத்தல் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வருகின்றனர்.

    • கைது செய்யப்பட்ட வாலிபரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
    • மீட்கப்பட்ட சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    நாகர்கோவில்:

    ஈத்தாமொழி பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த சிறுமி திடீரென மாயமானார். இதையடுத்து அவரது பெற்றோர் சிறுமியை பல்வேறு இடங்களில் தேடினார்கள். எங்கு தேடியும் சிறுமி கிடைக்கவில்லை.

    இதுகுறித்து கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுமியை தேடினார்கள். இது தொடர்பாக விசாரணை நடத்தியபோது சிறுமியின் பக்கத்து வீட்டை சேர்ந்த 3 குழந்தைகளின் தந்தை ஒருவரும் மாயமாகி இருப்பது தெரியவந்தது. எனவே போலீசாருக்கு அந்த நபர் மீது சந்தேகம் ஏற்பட்டது. சிறுமியை அந்த வாலிபர் கடத்தி சென்று இருக்கலாம் என்று போலீசார் கருதினார்கள்.

    அந்த வாலிபரின் செல்போன் எண்ணை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். செல்போன் டவர் உதவியுடன் சிறுமியை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது அந்த நபரின் செல்போன் டவர் நாகப்பட்டினத்தில் இருப்பது தெரியவந்தது. உடனே கன்னியாகுமரி மகளிர் போலீசார் நாகப்பட்டினம் விரைந்து சென்றனர். அங்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது வாடகை வீட்டில் சிறுமியுடன் 3 குழந்தைகளின் தந்தை குடும்பம் நடத்தியது தெரியவந்தது.

    போலீசார் அந்த வாலிபரை பிடித்ததுடன் சிறுமியை மீட்டனர். மீட்கப்பட்ட சிறுமியையும், அந்த வாலிபரையும் கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் அந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் அந்த வாலிபரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வாலிபரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். மீட்கப்பட்ட சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 8-ம் வகுப்பு மாணவியை 3 குழந்தைகளின் தந்தை கடத்தி சென்று குடும்பம் நடத்திய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • சிறுமி நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து வெளியே சென்றார்
    • வாலிபர் கடத்தி சென்றதாக பெண்ணின் தாயார் போலீசில் புகார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் குப்பூர் அன்னசாகரத்தான் கொட்டாய் பகுதிையச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி.

    இவர் சோளகொட்டாய் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் சிறுமிக்கும் மான்காரன்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த சின்னசாமி மகன் நந்தகுமார் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனை சிறுமியின்தாயார் கண்டித்துள்ளார். இதனால் சிறுமி விரக்தியில் இருந்தார்.

    இந்த நிலையில் சிறுமி நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஆனால் அவர் மீண்டும் வீடு திரும்பி வரவில்லை.

    இதுகுறித்து சிறுமியின் தாய் சித்ரா தருமபுரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனது மகளை நந்தகுமார் என்பவர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றிருக்கலாம் என்று சந்தேகத்தின் பேரில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடிவருகின்றனர்.

    • மாணவியின் தந்தை அந்தியூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடிவந்தனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பருவாச்சி காட்டூர் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவர் தற்போது தேர்வு எழுதிவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று வெளியே செல்வதாக கூறி சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து மாணவியின் பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். எங்கு தேடியும் மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து மாணவியின் தந்தை அந்தியூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடிவந்தனர்.

    இந்த நிலையில் தர்மபுரி மாவட்டம் நெருப்பூர் பகுதியில் ஒரு வாலிபருடன் மாயமான மாணவி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் மீட்டு அந்தியூருக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவியை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்றது அந்தியூர் அருகே உள்ள சொக்கநாதமலையூரை சேர்ந்த நல்லசாமி (23) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் நல்லசாமியை கைது செய்தனர். மேலும் அவரை பவானி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • சம்பவத்தன்று வீட்டைவிட்டு வெளியே சென்ற சிறுமி நீண்டநேரமாகியும் காணவில்லை.
    • தனபால், ரேவதி, அவரது மகன் தமிழ்செல்வன் ஆகியோர் 3 பேரும் சேர்ந்து கடத்தி சென்று விட்டதாக புகார் தெரிவித்தார்

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் கோட்டப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது மதிக்கத்தக்க சிறுமி. அதே பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டைவிட்டு வெளியே சென்ற சிறுமி நீண்டநேரமாகியும் காணவில்லை.

    இதுகுறித்து சிறுமியின் தாய் சசி கோட்டப்பட்டி போலீஸ் நிலையத்தில் தனது மகளை கோட்டப்பட்டியை அடுத்த அம்பேத்கர் நகரைச் சேர்ந்த தனபால், ரேவதி, அவரது மகன் தமிழ்செல்வன் ஆகியோர் 3 பேரும் சேர்ந்து கடத்தி சென்று விட்டதாக புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் 3 பேரும் மீதும் வழக்கு பதிவு செய்து மாணவி உள்பட 4 பேரையும் தேடிவருகின்றனர்.

    • தேர்வு முடித்து நிலையில் வீட்டில் இருந்த சிறுமி கடந்த 5-ந் தேதி வெளியே சென்றார்.
    • கம்பைநல்லூர் மோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் காளியப்பன் மகன் பிரபு என்பவர் கடத்தி சென்றிருக்கலாம் என்று சந்தேகத்தின் பேரில் புகார் தெரிவித்தார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் பழைய தருமபுரி நத்தவாய் தெருவைச் சேர்ந்த 17 வயது மதிக்கத்தக்க சிறுமி அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். தேர்வு முடித்து நிலையில் வீட்டில் இருந்த சிறுமி கடந்த 5-ந் தேதி வெளியே சென்றார்.

    ஆனால் மீண்டும் அவர் வீடு திரும்பிவரவில்லை. இதனால் பதறிப்போன பெற்றோர் அவரை பல இடங்களில் தேடி–பார்த்தனர். எங்கும் தேடியும் அவர் கிடைக்காததால் மாயமானது தெரியவந்தது.

    இதுகுறித்து சிறுமியின் தந்தை பழனிசாமி தருமபுரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தனது மகளை கம்பைநல்லூர் மோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் காளியப்பன் மகன் பிரபு என்பவர் கடத்தி சென்றிருக்கலாம் என்று சந்தேகத்தின் பேரில் புகார் தெரிவித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாயமான சிறுமியையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    • ரோந்து பணியின் போது போலீசார் மீட்டனர்
    • பெற்றோரிடம் ஒப்படைப்பு

    ஆரணி:

    கலசபாக்கம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பிளஸ்-2 மாணவி கடந்த 25-ந் தேதி கடத்தப்பட்டார். இந்த நிலையில் 26-ந் தேதி அதிகாலை 3 மணியளவில் ஆரணி- ஆற்காடு நெடுஞ்சாலையில் அப்பந்தாங்கல் கூட் ரோடு அருகே உள்ள சோதனைச்சாவடியில் ஆரணி டவுன் போக்குவரத்து போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந் திரன், ஆரணி தாலுகா போலீஸ்காரர் பாபு ஆகியோர்ரோந்து சென்றனர்.

    அப்போது அங்கு நடந்து சென்ற பள்ளி மாணவியையும், மற்றவரையும் அழைக்கும் போது அந்த நபர் தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து மாணவியை போலீசார் மீட்டு விசாரித்தனர்.

    அப்போது மாணவி, தன்னை கத்திமுனையில் காரில் கடத்தி வரப்பட்டதாகவும் இரவு முழுவதும் ஒரு இடத்தில் இருந்ததாகவும் அதிகாலையில் வேறு பஸ் ஏறி செல்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்ததாக கூறினார். இதையடுத்து மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

    இந்த நிலையில் கடத்தப்பட்ட மாணவியை மீட்டு ஒப்படைத்த ரவிச்சந்திரன், பாபு ஆகியோரை திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்.

    ×